மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்..
மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் குறைந்தபட்ச அதிகாரத்தைக்கூட இதுவரையில் பயன்படுத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவர்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அரசுக்கு கிடைக்கும் நிதி வசதிகளுக்கு ஏற்ப அந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சுமார் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும், தற்போது பக்குவ நிலை அடைந்திருக்க வேண்டிய ஒரு தொழிற்சங்கம் இவ்வளவு கட்டுப்பாடின்றி செயல்படுவது குறித்து கேள்வி எழுகிறது என தெரிவித்துள்ளார்.

Post a Comment