மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
எந்த ஆபத்தான நிலைமையையும் எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளன.
ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுப்பி வைக்கப்படும்.
அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு, இன்று முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை இலங்கைத் தூதரகம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment