தங்கள் விசுவாசத்தை புதுப்பித்துள்ள ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் குடியரசின் மறைந்த நிறுவனர் இமாம் கோமெய்னியின் கொள்கைகளுக்கு தங்கள் விசுவாசத்தை புதுப்பித்துள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி சனிக்கிழமை (31) தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இமாம் கோமெய்னியின் அடக்கஸ்த்தலம் சென்றார்.
அவர்கள் மலர் மாலைகளை வைத்து இமாம் கோமெய்னி மற்றும் புரட்சியின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். புனித இடத்தின் பாதுகாவலராகப் பணியாற்றும் மறைந்த நிறுவனரின் பேரனும் மதகுருவுமான செய்யத் ஹசன் கோமெய்னி, ஜனாதிபதி மற்றும் அவரது குழுவுடன் சென்றார்.
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இமாம் கோமெய்னியின் அடக்கஸ்த்தலம் சென்ற முக்கியத்துவமிக்கதாக நோக்கப்படுகிறது.

Post a Comment