3 கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சட்டவிரோத 397 கைத்தொலைபேசிகள்
3 கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 397 கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கிரீன் சேனல் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இலங்கை விமான பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 07.00 மணி அளவில் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் வந்துள்ளதுடன் அவரது பயணப் பையை சோதனையிட்ட போது ஆப்பிள் மற்றும் சம்சங் வகை கைத்தொலைபேசிகள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment