போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட 2 நபர்கள் கைது
திருகோணமலை - இந்திகடுவ பகுதியில் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட 2 நபர்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பௌத்த பிக்கு வசம் இருந்து 1520 மில்லிகிராம் கஞ்சாவும், சிவில் பாதுகாப்பு படையினரின் வசம் இருந்து 540 கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பௌத்த பிக்கு புலிகண்டி குளம் பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment