Header Ads



அரச சேவை அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளது


வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளது.  2027 ஆம் ஆண்டில் இதற்காக 330 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர் வெளிப்படுத்தினார். 


"2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபா செலவானது. இவ்வருடம் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது. 2027 இல் 330 பில்லியன் ரூபா செலவாகும். இது மொத்த சம்பளத்திற்குச் செலவாகும் தொகை அல்ல. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு மாத்திரமேயாகும். அப்போது இது சம்பளத்துடன் இணைகின்றது." 


"அந்த அதிகரிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் ஜனவரி மாதத்திலும் அதிகமாகக் கிடைத்தது. அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு அமைவாக மேலதிக நேரம் (OT) அதிகரிக்கின்றது. ஏனைய மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. விடுமுறை தினக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. இவற்றை நாட்டின் பொருளாதார நிலைமைக்குச் சார்பாகவே செய்ய முடியும்,"


- நலிந்த ஜயதிஸ்ஸ 

No comments

Powered by Blogger.