2025 ஆம் ஆண்டிலேயே அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது
பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன. ஆனால், இந்த அளவு 2025 ஆம் ஆண்டில் 23,692 கிலோகிராம் 307 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், இது (2024 உடன் ஒப்பிடுகையில்) சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு.
"நாடே ஒன்றிணைவோம்" தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

Post a Comment