சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதிகளில் 19% அதிகரிப்பு
சவுதி அரேபியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியானது, 2024 ஆம் ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 19% அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இந்த அடைவு குறித்து கருத்துத் தெரிவித்த சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத்,
இந்த இரட்டை இலக்க வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் ஒரு சிறந்த சாதனை என்பதுடன், இது, ரியாதில்உள்ள இலங்கை தூதரகம், வெளியுறவு, வெளிநட்டுவேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வர்த்தகதிணைக்களம், இலங்கை ஏற்றுமதி மேம்படுத்தல் சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் ஏனயை தொடர்புடையநிறுவனங்களுடனான நெருங்கிய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நிலையான மற்றும் முறையான ஒருங்கிணைப்புடனான முயற்சிகள் மூலம் அடையப்பெற்றதாகும் என குறிப்பிட்டார்.

Post a Comment