அரச வங்கி முகாமையாளரினால் 163 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் மோசடி
அரச வங்கி முகாமையாளர் ஒருவர், அவர் பணியாற்றிய வங்கியிலேயே போலியான பொருட்களை தங்கமாக அடகு வைத்து 163 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட பெப்ரவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையைத் தொடர்ந்து கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகாரா மகாராச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேக நபர் இரண்டு ஆண்டுகளில் 26 முறை மோசடியைச் செய்ததன் மூலம் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள ஒரு அரச வங்கியின் முகாமையாளரான இந்திக நிஷாந்த அதிகாரி என்பவதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment