இலங்கைக்கு Qatar Charity யின் மகிப்பெரிய உதவித் தொகை அறிவிப்பு
கத்தார் அறக்கட்டளை நிதியம் (Qatar Charity) இலங்கையில் உள்ள கத்தார் தூதரகத்தின் ஆதரவுடன், தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக ரூ. 55 மில்லியன் அவசர நிவாரண முயற்சியைத் தொடங்கியுள்ளது, 1,800 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களை வழங்கும் நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது.
கோத்தபய அரசாங்கத்தினால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருந்த கத்தார் அறக்கட்டளை நிதியம், இலங்கைக்கு மிக அவசியமான நேரத்தில் இந்த குறிப்பிடத்தக்க உதவித் தொகையை அறிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது. கத்தார் மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் எமது வாழ்த்துக்கள்.

Post a Comment