Header Ads



அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது - ஜனாதிபதியை நினைத்து நினைத்து மகிழ்ச்சி


இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள  முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க,  ஜனாதிபதி  திசாநாயக்கவை நினைத்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். 


கடந்த காலங்களில் விளையாட்டு துறை அமைச்சில் திருடர்கள் இருந்தனர். எனினும் தற்பொழுது அவ்வாறானவர்கள் இல்லை. திருடர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளனர்.


விளையாட்டு வீரர்களை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையான உணவுகளை வழங்கி அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்


பயிற்றுவிப்பாளர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பல பயிற்றுவிப்பாளர்களுக்கு விளையாட்டு வீரர்களை எவ்வாறு நடத்துவது என்பது தெரியாது. விளையாட்டு வீரர்களை சரியான முறையில் பராமரிப்பதற்கும் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.