இலங்கை அனர்த்தம், சுவிஸ் விமானத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்.
விமனத்தில் 350 க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்க வேண்டும். 90 சதவீத்திற்கும் அதிகமானவர்கள் சுவிஸ் நாட்டினர். கண்ணியமாக, சுருக்கமாக, உறங்கிக் கொண்டிருந்த எந்தப் பயணிக்கும் இடையுறு இல்லாமல் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
குறித்த பெண் தனக்கோ, இலங்கையில் தனக்கு தெரிந்தவர்களுக்கோ பணத்தை வைப்பிலிடுமாறு கோரவில்லை. ஜனாதிபதி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறே குறிப்பிட்டார்.
இது இவரது இலங்கைக்கான முதலாவது பயணம்.
சுவிஸ் நாட்டு விமானம், சுவிஸ் பயணிகள் நிறைந்திருந்த அந்த விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பெண்ணான கதரின் முயற்சி போற்றத்தக்கது. இலங்கையர்களாகிய நாமும் அவரை வாழ்த்துவோம், பாராட்டுவோம்.
நாமும் ஒன்றுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம். தேசத்துக்கு செய்யும் உயர் பங்களிப்பு இது. 🇱🇰
(தொழில்சார் ஊடகவியலாளர் அன்ஸிர்)
www.jaffnamuslim.com

Post a Comment