Header Ads



கீரி சம்பாவை 'பாஸ்மதி' என விற்ற வர்த்தகருக்கு அபராதம்


கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் 'லங்கா பாஸ்மதி' எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. 


மாத்தளை, நாலந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. 


குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நாவுல நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு 110,000 ரூபா அபராதம் விதிக்குமாறு நீதவான் இன்று (16) உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.