இழப்பீடு பெற உரிமை உள்ள, அனைவருக்கும் அதனை வழங்க வேண்டும் - ஜனாதிபதி
வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபா ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும்போது அத்தகைய நடவடிக்கைகளை நியாயமானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

Post a Comment