இலங்கை மக்களுக்கு நிவாரண உதவியாக ஒரு மில்லியன் யுவான் - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவியாக ஒரு மில்லியன் யுவான் நிதியுதவி வழங்கப்படும் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தினால் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிதியுதவியானது இலங்கை மக்கள் மீது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள "அன்பு மற்றும் அக்கறையின்" வெளிப்பாடாக அமைந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment