Header Ads



உலகின் கண்ணுக்குத் தெரியாத ஹீரோ யூசுப் அபு ஹதாப்


உலகின் கண்ணுக்குத் தெரியாத ஹீரோ, துயரத்தின் மத்தியில் கபுறுகளைத் தோண்டிய யூசுப் அபு ஹதாப்


காசாவைச் சேர்ந்த 65 வயதான யூசுப் அபு ஹதாப். இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் பல தசாப்தங்களைச் செலவிட்டார்.  தியாகிகளின் உடல்களை அபு ஹதாப் உரியமுறையில் நல்லடக்கம் செய்கிறார். 


அவரது சொந்த மகனும், சகோதரரும் மரணங்களைத் தழுவிய  போதும் கடமை உணர்வு, மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு அவர் தனது பணியைத் தொடர்கிறார். காசாவில் அவர் 18.000 க்கும் மேற்பட்ட உடல்களை அமைதியாக அடக்கம் செய்துள்ளார். ஒவ்வொன்றும் ஒரு கதை. ஒவ்வொரு கபுறும்  கற்பனை செய்ய முடியாத துன்பங்களுக்கு சான்றாகும்.


மரணம் மற்றும் இழப்புகளால் சூழப்பட்ட ஒரு நாட்டில்,  இறந்தவர்கள் மறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்த மனிதர் யூசுப் அபு ஹதாப்.


இந்த யூசுப் அபு ஹதாப்புக்காக பிரார்த்தியுங்கள். காசா வாழட்டும்.

No comments

Powered by Blogger.