Header Ads



மஸ்ஜித் நபவியில் கால் நூற்றாண்டுகளாக தொழுகை அழைப்பு பாங்கொலித்த முஅத்தீன் வபாத் ஆனார்


புனிதமிகு மதீனா மஸ்ஜித் நபவியில்  கால் நூற்றாண்டுகளாக தொழுகை அழைப்பு பாங்கொலித்த முஅத்தீன்  ஷேக்பைசல் பின் அப்துல் மலிக் நுமான் நேற்று மாலை வஃபாத் ஆனார்.

 

மஸ்ஜித் நபவியில் பல தலைமுறையாக பாரம்பரியமாக முஅத்தீன் பொறுப்பு வகித்து வந்த  குடும்பத்தை சேர்ந்தவர்.


இவரது பாட்டன் முப்பாட்டன் உட்பட மதீனா மஸ்ஜித் நபவியில் தொழுகை அழைப்பு முஅத்தீனாக பணியாற்றியுள்ளனர்.


இவரது தந்தை தனது 14வது வயதில்  மஸ்ஜித் நபவியில் முஅத்தீனாக பொறுப்பேற்று 90வயதில் மரணிப்பது வரை முஅத்தீனாக பணியாற்றியவர்.


தந்தையின் மரணத்திற்கு பிறகு  2001ம் ஆண்டு முஅத்தீன் பொறுப்பேற்ற  ஷேக்பைசல் பின் அப்துல் மலிக் நுமான் அவர்கள் கடந்த 25ஆண்டுகள் தனது இனிமையான குரலால் ஐவேளை தொழுகைக்கு பாங்கொலித்தவர்.


ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரக்கூடியவர்களை இவரது பாங்கொலி கவர்ந்திருந்தது.


உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை வஃபாத் ஆனவரின் ஜனாஸா இன்று அதிகாலை ஃபஜ்று தொழுகையோடு  மஸ்ஜித் நபவியில் ஜனாஸா தொழுகைக்கு பின் மதீனா ஜன்னதுல் பகீ கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் மஃபிறத் அருள்வானாக 


Colachel Azheem

No comments

Powered by Blogger.