6 ஆண்டுகளாக கோமாவிலிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரருமான அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) காலமானார்.
கடந்த 2018 டிசம்பர் 28 ஆம் ஆண்டு, கல்கிசை கடற்கரையில் சக வீரர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அக்ஷு பெர்னாண்டோ, பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது பாதுகாப்பற்ற தொடருந்து கடவையைக் கடக்க முயன்றார்.
அதன்போது, தொடருந்து மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் கடந்த 6 ஆண்டுகளாகக் கோமா நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க மற்றும் கித்ருவன் வித்தானகே போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து அவர் விளையாடியுள்ளார்.

Post a Comment