Header Ads



நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம்


நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34% மக்கள் வசிக்கின்றனர் என்றும், அந்த நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீற்றர் வரை பரந்துள்ளது.


கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, மண் மேடுகள் சரிந்து விழுந்தமையாலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன , அது குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.