20 கோடி பெறுமதியான 'குஷ்' பிடிபட்டது
20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்திச் செல்ல முயன்ற பயணிகள் நால்வர் திங்கட்கிழமை (29) அன்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான 6E-1185 என்ற விமானம் மூலம் திங்கட்கிழமை (29) அன்று காலை 07.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நான்கு பயணிகளும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment