Header Ads



தற்போது மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விடுத்து Mp களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும்


பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு  சாமர சம்பத் Mp தெரிவித்துள்ளார்.  தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துக்கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும். தற்போது மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

 

நாடாளுமன்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது. இல்லையேல், ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு வந்து உரையாற்றுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.