நுகேகொடை பேரணி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய பல புகைப்படங்கள் போலியானவை - டில்வின்
நுகேகொடை பேரணி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய பல புகைப்படங்கள் போலியானவை. பெரும்பாலான சமூக ஊடகங்கள் பொய்யான செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றன. அவற்றில் வெளியிடப்படும் தவறான தகவல்களால் யாரும் பீதியடைய வேண்டாம். சமூக ஊடகங்களில் தகவல்களின் நம்பகத்தன்மை கணிசமாகக் குறைந்துள்ளது. சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடும் பலர் போலியானவர்கள். இந்தச் சூழ்நிலையால், சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே JVP செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment