Header Ads



மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கியவர்கள் பிடிபட்டனர்



பல்கலைக்கழத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் போதைப்பொருள் வழங்கிய இருவரை நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

 

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒருசில மாணவர்களுக்கும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் அந்த இருநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளை வழங்க வந்துள்ளனர். 


குறித்த இருவரும் 10 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர். 


ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியில் காத்திருந்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக பல்கலைக்கழக மாணவர்களுக்குப் போதைப்பொருட்களை வழங்கி வருபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.