Header Ads



எதிர்ப்புப் பேரணியில் மகிந்த பங்கேற்காதது ஏன்..?


அநுர அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள நுகேகொட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகமொன்றிற்கு நேற்று அளித்த பேட்டியில், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து என்னை பார்வையிட தங்காலைக்கு மக்கள் வருகின்றனர். அவர்களை தவறவிட முடியாது. 


தங்காலையில் இருந்து நுகேகொடைக்கு பயணிக்க கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும்.


அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள போராட்டப் பேரணியில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காததை சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம். வரவு செலவு திட்டம் ஒரு தண்ணீர் போத்தல் போன்றது.


நாங்கள் போதைப்பொருள் சோதனைகளை நடத்தியபோது அரசாங்கம் எங்களை நோக்கி விரல் நீட்டியது. ஆனால் இப்போது நாங்கள் சொல்வது சரிதான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என மகிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.