இந்திய இஸ்லாமியர்கள் எப்போதும் தீவிரவாதத்துக்கு எதிராகதான் இருந்து வந்திருக்கிறார்கள் - அஜித் தோவல்,
தீவிரவாதத்தை இந்து - முஸ்லிம் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் Vs இந்துக்கள் என்கிற நிலை இல்லை. தீவிரவாதம் என்பது தேசிய பிரச்சினை. மதப் பிரச்சினை அல்ல. தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இஸ்லாமிய அமைப்புகளும் இந்து அமைப்புகளை போலவே எதிர்த்துதான் நிற்கின்றன.
இந்திய இஸ்லாமியர்கள் எப்போதும் தீவிரவாதத்துக்கு எதிராகதான் இருந்து வந்திருக்கிறார்கள். உண்மையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்க்க இந்தியாவிலிருந்து அதிகமாக இந்துக்களைதான் பாகிஸ்தான் பயன்படுத்தி இருக்கிறது.
- பாஜக அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், 2014ம் ஆண்டில் பேசிய காணொளி தற்போது வைரல் -
(Kalaignar News)

Post a Comment