Header Ads



எம்முடன் விளையாட வரவேண்டாம், எம்மை மிரட்ட முடியாது - ரில்வின் சில்வா


அரசை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது. எம்முடன் விளையாட வரவேண்டாம்.


ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றியும், கொழும்பைச் சுற்றிவளைப்பது குறித்தும் தற்போது கதைக்கின்றனர். அவர்களின் நகர்வுகள் எமக்குச் சவால் அல்ல. எப்படி போராட்டம் நடத்த வேண்டும், எப்படி பேரணி நடத்த வேண்டும் எனச் செய்து காட்டியவர்கள் நாம். எனவே, 3000, 4000 பேரைத் திரட்டி எம்மை மிரட்ட முடியாது. பேரணி பார்க்க வேண்டுமானால் நாமும் நடத்திக் காட்டுகின்றோம்.


கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசுக்கு எதிராகப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் மேற்படி அறிவிப்பை ரில்வின் சில்வா வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.