Header Ads



இங்கே உள்ள 'பறவைகள்' யார் தெரியுமா..?



சின்னஞ்சிறிய அபாபீல் பறவைகள் ஒரு பெரிய யானைப் படையையே தோற்கடித்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும்.


ஐதராபாத்தில் உள்ள ரஹ்மத் நகரில், அப்படியோரு நிகழ்வு.


இங்கே உள்ள 'பறவைகள்' யார் தெரியுமா? தங்கள் கனவுகளை கானல் நீராக்கும் இளம் பெண்கள்தான்.


அவர்களுக்காக பல் மருத்துவர் டாக்டர் சையதா மரியம், அவருடைய கணவர் (அவசரச் சிகிச்சை மருத்துவர்), மற்றும் அவருடைய சகோதரர் (மயக்க மருந்து நிபுணர்) ஆகியோரால் அபாபீல் அறக்கட்டளையைத் தொடங்கி உதவி வருகிறார்கள்.


அக்டோபர் 21, 2024 அன்று வெறும் 12 மாணவர்களுடன் ஒரு வாடகை அறையில் தொடங்கிய அபாபீல், இப்போது இரண்டு கிளைகளில் 16 ஆசிரியர்கள், 510 மாணவர்களுடன் இயங்குகிறது. 


ஒவ்வொரு மாணவரும் பின்தங்கிய பின்னணியில் இருந்து வருகிறார்கள். பலர் ஆதரவற்றோர் அல்லது ஒற்றைப் பெற்றோருடன் வாழ்பவர்கள். அறக்கட்டளை மாணவர்களை SSC மற்றும் Intermediate தேர்வுகளுக்குத் தயார் செய்கிறது. கல்வியுடன், அவர்கள் தொழில்சார் மற்றும் கணினி திறன்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.


“பெரும்பாலான பெண்கள் Intermediate-க்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள், எனவே அதற்கு முன் அவர்களுக்குப் பயனுள்ள ஒன்றைக் கற்றுக்கொடுப்பதை உறுதி செய்கிறோம்," என்கிறார் டாக்டர் மரியம்.


“தானதர்மம் என்பது ஒருமுறை உணவளிப்பது என்று மக்கள் நினைக்கிறார்கள். உணவளிப்பது மதிக்கத்தக்கதுதான், ஆனால் கல்வி மற்றும் திறன் மேம்பாடு மூலம் நிரந்தரமாக நிலைக்கக்கூடிய ஒன்றை உருவாக்குவதே எங்கள் நோக்கம். எந்தத் தாக்கமும் சிறியதல்ல என்பதை அபாபீல் நினைவூட்டுகிறது. சிறிய சிறகுகள் கூடப் பெரிய ராட்சசர்களை வீழ்த்த முடியும்!” என்கிறார் டாக்டர் மரியம்.


பெண் கல்விக்கு எதிரான மனப்பான்மை யானைப் படைபோல் இங்கு பலமான உள்ளது. அதை வீழ்த்தும் அபாபில் பறவைகள்தான் இந்த மங்கைகள்.


மொழியாக்கம் - நூருல் இப்னு ஜஹபர் அலி

The New Indian Express

No comments

Powered by Blogger.