டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்
டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment