அல்லாஹ் விதைத்துள்ள உள்ளுணர்வு..
எலி இருப்பதை உணர்ந்தவுடன் கூட்டைப் பாதுகாக்க இறக்கும் வரை எலியைக் கொட்டுகின்றன. இருப்பினும் எலியின் உடலை அகற்றவோ வெளியே எடுத்துச் செல்லவோ முடியாத அளவுக்கு பெரிதாக இருப்பதால், அங்குதான் பிரச்சினை தொடங்குகிறது.
ஆபத்தைக் கையாள்வதில் தேனீக்களின் உள்ளுணர்வு நுண்ணறிவுடன் செயல்படுகிறது. சடலத்தை சிதைத்து நாற்றம், கிருமிகள் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, புரோபோலிஸ் அல்லது தேனீ பசை எனும் இயற்கைப் பொருளைப் பயன்படுத்தி எலியை முழுமையாக தனிமைப்படுத்துகின்றன.
இந்தப் பசை மர பிசின் மற்றும் தேன் மெழுகிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது அற்புதமான பண்புகளைக் கொண்டது. அவை:
👉 பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு சக்தி மிக்கது.
👉 ஈரப்பதம் ஏற்படுவதைத் தடுக்கும்.
👉 கூட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தும்.
தேனீக்கள் அந்தப் பசையால் எலியை முழுமையாக மூடுகின்றன. அதனால் உடல் சிதைவதில்லை. கெட்ட வாடையும் தொற்றும் பரவுவதில்லை.
காலப்போக்கில் சடலம் படிப்படியாக காய்ந்து, கூட்டினுள் இருக்கும் தேனுக்கும் தேனீக்களுக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காது.
இது மனித சிந்தனையில் உதித்த யோசனை அல்ல. மாறாக அந்தச் சிறிய உயிரினத்தில் அல்லாஹ் விதைத்துள்ள உள்ளுணர்வு.
இவ்வாறு செயல்படுமாறு தேனீக்களுக்கு அல்லாஹ்தான் வஹி அறிவித்தான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
தேனீக்களைக் குறித்து அல்லாஹ் சொல்கிறான்: "நிச்சயமாக! சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதிலும் ஒரு சான்று இருக்கிறது” (16:69)
தேனீக்கள்தானே என்று துச்சமாக எடைபோடக் கூடாது என்ற பாடமும், பேராசை பெரு நஷ்டத்தையே தரும், சிலபோது உயிரையே பறித்துவிடும் என்ற படிப்பினையும் இதில் உள்ளது.
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment