யாழ் முஸ்லிம் அரச ஓய்வு நிலையாளர் அமைப்பின் ஒன்றுகூடல்
வடபுலத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்ட இச்சந்தர்ப்பத்தில், யாழ் முஸ்லிம் அரச ஓய்வு நிலையாளர் அமைப்பின் ஏற்பாட்டில், ஓய்வுபெற்ற யாழ் முஸ்லிம்களின் ஒன்று கூடலொன்று மாளிகாவத்தை இஸ்லாமிய நிலைய (Islamic Centre) மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர் A.B.M.அஸ்ரப் (நளீமி) கௌரவ அதிதியாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி, பேராசிரியர் F.M.நவாஸ்தீன் B.A, M.Sc,Phd கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் பல பாகங்களிலும் சிதறி வாழ்ந்த மூத்த பிரஜைகளான இவர்கள் நீண்டகால இடைவெளியின் பின்னரான இந்த ஒன்றுகூடலில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகமாகவும் கலந்து கொண்டதுடன்,க லை நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றினர். ஓய்வுபெற்ற இவர்களது சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
- யாழ் அஸீம் -






Post a Comment