"முழு நாடுமே ஒன்றாக" வெற்றிகரமாக தொடருகிறது
"முழு நாடுமே ஒன்றாக" என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை பாரியளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் நேற்று (20) வரையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 23,891 சுற்றிவளைப்புகளில் 23,550 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
638 சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டு, 614 சந்தேக நபர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.
மேற்கண்ட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, 650 கிலோ ஐஸ், 553 கிலோ கஞ்சா, 133 கிலோ ஹெரோயின், 59 கிலோ மாவா, 32 கிலோ ஹஷிஷ், 16 கிலோ குஷ் மற்றும் 13 கிலோ மதனமோதகம் ஆகிய போதைப்பொருட்களைப் பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment