அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச உதவியை நாடுமாறும் சந்திரிகா கோரிக்கை
நாட்டின் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறும், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவியை நாடுமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
"இந்தத் தன்மையிலான அனர்த்த நிலைமையை இலங்கை தனியாக கையாள முடியாது. எனவே, சர்வதேச உதவிகளை நாட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment