Header Ads



இராஜதந்திரிகளை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அழைப்பு


இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3  தூதுவர்கள் மற்றும் 2  உயர் ஸ்தானிகர்கள் இன்று (13)  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.


புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பின்வருமாறு.


1. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் கனடா  உயர் ஸ்தானிகர்   இசபெல் மாரி கெதரின் மார்ட்டின்


2. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் நெதர்லாந்து இராச்சிய  தூதுவர்  வீபே ஜேக்கப் டி போயர்.


3. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் அவுஸ்திரேலிய  உயர் ஸ்தானிகர் மெதிவ்  ஜோன் டக்வேர்த்.


4. புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் அல்ஜீரியா  மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி.


5. புது டில்லியை  தளமாகக் கொண்டு பணியாற்றும்   ஐஸ்லாந்து குடியரசின் தூதுவர்   பெனடிக்ட் ஹஸ்குல்ட்சன்.


இராஜதந்திரிகளை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

No comments

Powered by Blogger.