Header Ads



ரணிலின் ஆலோசகர் கைது


முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். 


இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகராக செயற்பட்ட காலத்தில் எவ்வித தேவைப்பாடுகளும் இன்றி தானியங்களை சேமித்து வைக்கும் தற்காலிக 50 களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கான பொருட்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


இதன்மூலம் அரசாங்கத்திற்கு 99,679,799 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர் இன்று காலை 8.25 அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.