Header Ads



இலங்கை வீரருக்கு சமூக வலைதளம் அவசியம் என்றால், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது சிறந்தது


தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார்.


சமூக வலைதளங்களில் ஏற்படும் கவனச் சிதறல்கள் வீரர்களின் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை பாதிக்கின்றன. நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தங்களது முழு கவனத்தையும் பயிற்சிக்கும், ஆட்டத்திற்கும் செலுத்த வேண்டும்


சில காலத்துக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருப்பது அவர்களின் கவனத்தை மீட்டெடுக்க உதவும். ஒரு வீரருக்கு சமூக வலைதளம் அவசியம் என்று தோன்றினால், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தான் சிறந்தது 


இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, வீரர்களது கவனம் முழுவதும் ஆட்டத்திற்கான தயார்படுத்தல் மற்றும் ஆட்டத் திறமையிலும் இருக்க வேண்டும் என அதப்பத்து வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.