குர்ஆனை படிக்க ஆரம்பித்ததும்...
அஸ்ஸலாமு அலைக்கும். நான் மெலனி. உங்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும். நான் இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண். நான் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவள் என பெருமைப்படுறேன். நான் Tv யில் ஒரு நிகழச்சியை பார்த்தேன். எனக்குள் இது, ஏதோ வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அதனால் கூகிளுக்கு போய் இஸ்லாத்தைப் பற்றி படித்தேன். அப்புறம் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு குர்ஆனை வாங்கினேன்.
குர்ஆனை படிக்க ஆரம்பித்ததும், எனக்குள் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென மனதில் தோன்றியது. அதனால கூகிளுக்கு போய், முஸ்லிமாக மாறுவது எப்படி என்று தேடி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.
தற்போது ஒரு மாதம் கழிந்து விட்டது. இன்னும் என் புதிய சமயத்தை படிச்சுக் கொண்டே இருக்கிறேன்.
அல்லாஹ் இவருக்கு அருள் புரியட்டும். உங்கள் பிரார்த்தனையில் இவரையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment