Header Ads



இந்தியா - மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும்


இந்தியா  -  மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல் டிச. 6ம் தேதி நாட்டப்படும் என்றும் மூன்று ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபிர், “முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்கா-வில் பாபர் மசூதி கட்டப்படும். இதற்கு, டிசம்பர் 6-ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்படும். அயோத்தியில் இடிக்கப்பட்டது போன்ற ஒரு மசூதியாக இது இருக்கும். அடிக்கல் நாட்டு விழாவுக்கு பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மசூதி மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். ஹுமாயூன் கபிர் கடந்த ஆண்டும் இது குறித்து பேசி இருக்கிறார். பாபர் மசூதி போன்ற ஒரு மசூதி முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கட்டப்படும் என அப்போது அவர் கூறி இருந்தார்.


இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அயோத்தியில் அற்புதமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதை நினைத்து ஒவ்வொரு இந்துவும் மகிழ்ச்சி அடைந்துள்ள தற்போதைய சூழலில், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படும் என ஹுமாயூன் கபிர் அறிவித்து  இருப்பது வருத்தத்துக்கும் கவலைக்கும் உரியது.” என தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.