உண்மையை உங்களுக்கு சொல்வதற்கு யாருமில்லை...
(அர்ச்சுனா Mp யின் 20-11-2025 பேஸ்புக் பதிவிலிருந்து..)
அன்பார்ந்த முஸ்லிம் உறவுகளுக்கு. புத்தளம் வைத்தியசாலை என் அறிவுக்கு எட்டிய வகையில் ஆதார வைத்தியசாலை தர வரிசையில் Type B வைத்தியசாலையாகவே இதுவரை காலமும் இருந்து வருகிறது. புத்தள மற்றும் சிலாபம் போன்ற இடங்களை சேர்ந்த பொது மக்களுக்கு முக்கியமாக சகோதர முஸ்லிம்ஸ் மக்களுக்கு அந்த வைத்தியசாலை மிகவும் இன்றியமையாத வைத்தியசாலை ஆகும்.
சாதாரணமாக ஆதார வைத்தியசாலைகள் டைப் சி ல இருந்து டைப் B க்கும் டைப் பி யிலிருந்து டைப் ஏ க்கும் மாத்தப்பட வேண்டிய ஒழுங்கு முறையாகும். அதன் பின்னரே அவை மாவட்ட வைத்தியசாலையாக மாற்ற முடியும்.
நேரடியாக டைப் பியில் இருந்து மாவட்ட வைத்தியசாலையாக மாற்ற முடியாது. டைப் பி ஆதார வைத்தியசாலைக்கும் மாவட்ட வைத்தியசாலைக்கும் ஆளணி மற்றும் வளங்களில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. உதாரணமாக யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் சாவகச்சேரி தெல்லிப்பளை போன்ற வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளாக இப்போதும் இருக்கின்றன.
ஆனால்,
புத்தள மக்களை ஏமாற்றுவதற்காக பாவம் குரலற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செம்மறி மந்தைகள் போன்று தலைவனையே பின்தொடர்கின்றன.
தலைவர் சொல்கின்ற பொய்யை தமிழில் அப்படியே ஒப்புவிக்கின்றன.
நான் அண்மையில் அணுகி எவ்வாறு இந்த மாற்றங்களை செய்வீர்கள்? பெயர் பலகையை மாற்றினால் போதுமா? எனறு கேட்டபோது ஆம் பெயர் பலகையை மாற்றினால் போதும் என்று எனக்கு பதில் சொல்லப்பட்டது.
அவரை நான் கடிந்து கொள்ள விரும்பவில்லை.
ஏனென்றால் அவருக்கு அது சம்பந்தமான அறிவுகள் இல்லை.
தலைவருக்கு ஜால்ரா அடிப்பது அவருடைய 5 வருடத் தொழில்.
அவரை முஸ்லிம் சமூகம் எதிர்க்கக் கூடாது.
அவரால் அதை மட்டுமே செய்ய முடியும்.
உண்மையாகவே இந்த வைத்தியசாலையை டைப் பீ ல் இருந்து உடனடியாக டைப் ஏ ற்க்கு பெயர் பலகை மாத்திரம் மாற்றாமல் ஆளணிகளையும் கட்டுமானங்களையும் வழங்குவதாக இருந்தால் நானே உங்களைப் பற்றி நன்றாக கதைப்பேன்.
பாவம் இந்த சபிக்கப்பட்ட இனம்!
தமிழர்களைப் போலவே மீண்டும் மீண்டும் ஏமாறுகிறது!
உண்மையை உங்களுக்கு சொல்வதற்கு யாருமில்லை.
சொன்னதால் நான் குற்றவாளி ஆகிறேன்!
அந்தக் கூட்டத்தை உங்களுக்காக எதிர்த்த வண்ணம் குற்றவாளி கூண்டில் நிற்பதற்கு தமிழனாக முஸ்லிம் இரத்த சகோதரர்களுக்காக போராடுவது என் தேசியத் தலைவன் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு செய்த அநியாயம் என்று நீங்கள் நினைப்பதற்கூறிய பிறவிக் கடனாக நான் பார்க்கிறேன்.

Post a Comment