Header Ads



நாட்டில் பேரவலம் தொடருகிறது - 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணம் - 21 பேரை காணவில்லை


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர்.


அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 


மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  4 வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.