Header Ads



நடுக்கடலில் 5 பில்லியன் பெறுமதியான 350 கிலோ ஹெரோயின்


இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 


இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு குறித்த படகு கொண்டு வரப்பட்டது. 


இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்படைக்குச் சொந்தமான நீண்ட தூரம் செல்லக்கூடிய கப்பல்களைப் பயன்படுத்தி குறித்த படகை நெருங்கினர்.  பின்னர் பலநாள் படகைத் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்த கடற்படையினர், படகிலிருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

No comments

Powered by Blogger.