யஹ்யா சின்வாரின் உடலை எரித்து விடுமாறு இஸ்ரேலிய அமைச்சர் பரிந்துரை
இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இஸ்ரேலிய அமைச்சர் மிரி ரெகேவ், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை எரிக்க பரிந்துரைத்துள்ளார்.
யஹ்யா சின்வாரின் உடலை, இஸ்ரேல் கைப்பற்றி வைத்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்குமாறு ஹமாஸ் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டபோதும் அதனை இஸ்ரேல் மறுத்துவிட்டது.
சர்வதேச சட்டங்களின்படி, யுத்தத்தில் கைப்பற்றப்படும் உடல்கள் உரிய மரியாதையுடன், கையளிக்கப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment