போதைப்பொருள் அச்சுறுத்தலால் பேரழிவாக மாறியுள்ள வாழ்க்கை - எடுத்துரைத்த ஜனாதிபதி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் முதன்முறையாக இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
அதன்படி, கூடிய தேசிய செயற்பாட்டு சபை, போதைப்பொருள் வலையமைப்பை ஒழித்தல், அதற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுதல், பொதுமக்களை அறிவூட்டுவதற்காக வெகுஜன அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் ஊடக பிரச்சாரத்தை செயல்படுத்துதல் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தியது.
இந்த செயற்பாட்டு சபையை நிறுவுவதன் பிரதானமான நோக்கத்தை விளக்கிய ஜனாதிபதி , போதைப்பொருள் அச்சுறுத்தலால் இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ள விதம் மற்றும் அது எவ்வாறு ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியுள்ளது என்பது குறித்து எடுத்துரைத்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க மக்களின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் இத்தகைய விரிவான திட்டத்தைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்கள் பாராட்டினர்.

Post a Comment