இத்தனை மரணங்களையும், இழப்புகளையும் சந்தித்தும், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என வேறு எங்கும் கேட்க முடியாது.
உலகத்திற்கு ஈமானைக் (இறைநம்பிக்கையை) கற்றுக்கொடுக்க வந்தவர்களே காஸா மக்கள்
இத்தனை மரணங்களையும் இழப்புகளையும் சந்தித்தும், இறைவனுக்கு நன்றி சொல்லி 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே) மற்றும் 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று இவ்வளவு அதிகமாக வேறு எங்கும் கேட்க முடியாது.
போர் ஆரம்பித்தாலும் தொடர்ந்தாலும், அவர்களின் இறைவனின் புகழ்ச்சிக்கு ஒருபோதும் குறைவில்லை.
எகிப்திலுள்ள குடும்பங்களைச் சந்திக்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் தங்கள் குடும்பத்தில் புதிதாக உயிர்த்தியாகம் செய்தவர்களின் (ஷஹீதுகளின்) எண்ணிக்கையைச் சொல்வார்கள். அவர்களின் உயிரற்ற உடலைக் காண்பிப்பார்கள். அப்போதும் அவர்கள் 'அல்ஹம்துலில்லாஹ்'வையும் 'அல்லாஹு அக்பர்'ரையும் உச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.
காஸா ஒரு பாடசாலை. எல்லா மனிதர்களுக்கும்.
என்னை வியக்க வைத்த ஒரு சம்பவத்தை மேலே குறிப்பிட்டேன், அவ்வளவே.
Drhashim rifai

Post a Comment