தயவுசெய்து பிரிவினையை உருவாக்கும் பதிவுகளைப் பகிர வேண்டாம் - பாத்திமா ஷாபியா யாமிக்
தயவுசெய்து பிரிவினையை உருவாக்கும் பதிவுகளைப் பகிர வேண்டாம். எங்கள் கிராமத்தில் முஸ்லிம், சிங்கள, தமிழ் என நாம் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அனைவரும் ஒரே குடும்பம். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை, எமது நாட்டிற்கு பெற்றுக் கொடுப்பதே நோக்கம். எனது நாட்டின் கொடியை உயர்த்தும் போது அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் கண்டி விகாரமகா தேவி பாடசாலையில் கல்வி பயில்கிறேன். எனது முதலாம் ஆண்டிலிருந்து எனது போட்டிகளுக்கு, அவர்கள் உதவி வருகிறார்கள்.
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தங்கப் பதக்கம் வென்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்குப் பிறகு, பாத்திமா ஷாஃபியா யாமிக்குக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்வு கண்டியில் இன்று (28) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஒலிம்பிக் கனவுகள் உட்பட சகல கனவுகளும் நிறைவேற வாழ்த்துவோம் பிரார்த்திப்போம்.

Post a Comment