Header Ads



பூத்துக் குலுங்கும் நுவரெலியா


நுவரெலியா தேசிய பூங்காவாவின் ஹோட்டன் சமவெளியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது  பூக்கத் துவங்கியுள்ளன. இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படையெக்கின்றனர்.


இந்த மலர்களிடம்  ஒரு மென்மையான வாசம் இருப்பதாகவும் , பூக்கும் காலங்களில் இவற்றை 10 இற்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் தேடி வருவதாகவும் மலைப்பகுதியில் வளரும் இந்த செடிகளில் வெள்ளை ,நீலம் , ஊதா மற்றும் இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் பூத்து  அவைகள் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கின்றனர்.


மலர்களை காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுத்து வருவதால் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.