"எப்படி இருக்கிறீர்கள்? ஐயா, சுகமா?" "குறை இல்லை"
பேருவளை, மொரகொல்ல ஸ்ரீ புத்தசிரி மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபமொன்று திறக்கப்பட்ட நிகழ்வின்போதே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சந்திம ஹெட்டியாராச்சி, மஹிந்த ராஜபக்ஷவிடம், "எப்படி இருக்கிறீர்கள்? ஐயா, சுகமா?" என்று வினவியுள்ளார். அதற்கு மஹிந்த ராஜபக்ஷ, "குறை இல்லை" என்று பதிலளித்துள்ளார்.
மேலும், "ஐயா, நீங்கள் தங்காலை இ்ருந்தே இந்த நிகழ்வுக்கு வந்தீர்களா?" என்று சந்திம மீண்டும் கேட்க, "ஆம், நான் தங்காலையில் இருந்தேதான் இந்த விழாவுக்கு வந்தேன்" என்று மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, இருவருக்கும் இடையில் சிறிது நேரம் சுமூகமான உரையாடலும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு மிகவும் அன்பாக இந்த கலந்துரையாடலை மேற்கொண்டதால், நிகழ்வில் கூடியிருந்த பலரின் கவனத்தையும் இந்தச் சந்திப்பு ஈர்த்ததாக அறியப்படுகிறது.
(Hiru)

Post a Comment