இவர் யார் தெரியுமா..?
- Syed Ali -
33 ஆண்டு கால உறுதிப்பாடு !
சியோனிச ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அல்-கஸ்ஸாமின் மிகவும் வயதான கைதி மஹ்மூத் இஸ்ஸா இன்று (13) விடுவிக்கப்பட்டுள்ளார். அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்த் (இறைவனே பெரியவன், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) ❤️
33 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் நரக வாழ்க்கை, அதில் தொடர்ந்து 13 ஆண்டுகள் தனிமைச் சிறையில் கொடூரமான சித்திரவதை - "விடுதலையின் வெள்ள பிரளயம்" (ஃபளட் ஆஃப் தி ஃப்ரீ) என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஃபலஸ்தீனிய போராளி இயக்கங்கள் மத்தியஸ்தம் செய்துள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கஸ்ஸாம் தளபதி மஹ்மூத் இஸ்ஸா "அபு அல்-பரா" விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆக்கிரமிப்புச் சிறை வளாகங்களுக்குள் ஃபலஸ்தீனிய சுதந்திரப் போராட்டத்தின் நிலைத்தன்மைக்கான அர்த்தத்தை உள்ளடக்கிய காவியக் கதைகளில் ஒன்றுதான் ஷேக் இஸ்ஸாவின் கதை.
சியோனிச ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் முக்கியமான கஸ்ஸாம் தலைவர்களில் ஒருவர் ஷேக் மஹ்மூத் இஸ்ஸா அல்-மக்திசி.
சியோனிச ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களை விடுவிப்பதற்காக கஸ்ஸாம் பிரிகேடில் ஒரு தனிப் பிரிவை நிறுவியவர் ஷேக் இஸ்ஸா.
ஷேக் அஹ்மத் யாஸீனை விடுவிப்பதற்காக 1992 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு கூலிப்படையான நிஸ்ஸிம் டோலிடானோவை கைது செய்த ஹமாஸ் படையின் தலைவர்.
ஆனால் ஷேக்கைத் திருப்பித் தர சியோனிச ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகள் மறுத்தபோது, மஹ்மூதும் அவரது சகோதரர்களும் சேர்ந்து சிறைக்கைதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள்.
1993 ஆம் ஆண்டு இஸ்ஸாவை ஆக்கிரமிப்பாளர்கள் கடத்திச் சென்றனர்... ஆக்கிரமிப்பு சக்திக்கும் குடியேற்றக்காரர்களுக்கும் எதிராக நடத்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து, 46 ஆண்டுகள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படுவார் என்று ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகள் அறிவித்திருந்தனர்...
மூன்று தசாப்தங்களாக அவர் வெளி உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார்... அதில் சுமார் 13 ஆண்டுகள் மனித உரிமை ஆர்வலர்களைக் கூட சந்திக்க அனுமதிக்காமல் தனிமையில், ஒரு குறுகிய இருண்ட அறையில் அடைக்கப்பட்டு கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அப்படியிருந்தும் அந்தப் ஃபலஸ்தீனிய சுதந்திரப் போராளியைத் தளர்வடையச் செய்ய முடியவில்லை என்பது அவரது அசாதாரணப் போராட்ட மனப்பான்மையை உலகுக்கு உணர்த்துகிறது.
கைதி வாழ்க்கையின் தனிமை மற்றும் கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், உடன் இருந்த கைதிகளுக்கு ஆசிரியராகச் சேவை செய்தும், புதிய தலைமுறை போராளிகளுக்கு உத்வேகம் அளித்தும், அவர் தனது கல்வி மற்றும் அறிவுசார் பங்கினை நிறைவேற்றினார்.
சியோனிச ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகளால் கடத்தப்படும் ஃபலஸ்தீனியக் கைதிகளை விடுவிப்பதற்காக ஆக்கிரமிப்புக் கூலிப்படைகளைக் கைப்பற்றும் யோசனையை அவர் உருவாக்கினார் என்ற ஒரே காரணத்தினால் தான் சியோனிச ஆக்கிரமிப்புத் பயங்கரவாதிகள் இஸ்ஸாவுக்கு எதிராக கொடூரமான மற்றும் பயங்கரமான சித்திரவதைகளை ஏவினர் என்று போராட்ட இயக்க வட்டாரங்கள் கூறுகின்றன.
"மஹ்மூத் இஸ்ஸாவைச் சேர்க்காத ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட சம்மதித்ததற்காக நான் என்னையே குறை மதிப்புக்கு உட்படுத்திக்கொள்கிறேன்," என்று ஷஹீதுல் உம்மா யஹ்யா சின்வார் இதற்கு முந்தைய ஃபலஸ்தீனியக் கைதிகள் விடுதலை நேரத்தில் கூறியிருந்தார்.
இன்று ஷேக் இஸ்ஸா சுதந்திரம் அடைகிறார்... ஷேக் சின்வார் இரத்த சாட்சியாகியிருக்கிறார்....
அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்த்...🔻
Mubarak ravuthar

Post a Comment