Header Ads



ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு


பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். 


 ஷேக் ஹசீனாவுக்கு, எதிராக இனப்படுகொலை மற்றும் பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் மீது தொடர்பான வழக்குகளில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 


எதிர்வரும் 22 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.