Header Ads



கொள்ளையில் ஈடுபடும் காகம்


களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. 


இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.


இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.