Header Ads



உங்களுக்குத் தெரியாத குரூப்புகளில் சேர்ந்து பணத்தை இழக்காதீர்கள்


இலங்கையில்  WhatsApp   மோசடி ஹேக்கிங்  முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.


குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள் மூலம் பெறும் தகவல்கள் அதிகளவிலான மோசடி செய்யப்படுவதாக சாருகா தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.


“உங்களுக்குத் தெரியாத குழுக்களில் சேருவதன் மூலம் இந்த நிலைமை ஏற்படலாம். மிகக் குறைந்த விலையில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விற்பனை செய்வதாக கூறி முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


ஒன்லைனில் ஒரு கூட்டத்தில் சேர Zoom இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் இடம்பெறுகின்றது.


மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.